• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?

By மஞ்சை வசந்தன்

திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
ரூ. 150/-
  • Available in: Kindle
  • ISBN: B08WLRCWT8
Buy Now

திருக்குறள் மக்கள் அனைவரும் ஒரே இனம்தான், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது என்கிறார் பெரியார். இப்படி எத்தனையோ கூறலாம்.
அறம், பொருள், இன்பம் மூன்றோடு முடிகிறது! வீடு – மோட்சத்தில் நம்பிக்கையோ – இடமோ குறளில் கிடையவே கிடையாது!
மனு மற்றும் ஹிந்து சாஸ்திரங்கள் கூறும் தர்மம் வேறு. குறள்கூறும் அறம் – மனத்தூய்மை. மனத்துக்கண் மாசிலாதது மனத்தூய்மை!
வள்ளுவத்திற்கும் மனுவுக்கும் உள்ளது தண்ணீருக்கும் மண்ணெண் ணெய்க்கும் உள்ள வேறுபாடு. ஒன்று மலை; மற்றொன்று மடு! ஒன்று வெளிச்சம்; மற்றொன்று இருட்டு! அந்த அளவிற்கு இரண்டும் அடிப்படைத் தன்மையில் மாறுபட்ட இரு வேறு தத்துவங்களைக் கொண்டவை.
இப்படிப்பட்ட இரண்டையும் இணைத்து ஆரிய கலாச்சார மயமாக்குவதும் சமஸ்கிருத ஆதிக்கத்தை வலியுறுத்துவதும் புரட்டு – இமாலய புரட்டு ஆகும்!
நாகசாமி என்ற நச்சுக் கருத்தாளர் தம் மனம் போனபடி திட்டமிட்டே திருக்குறளில் திரிபுவாதங்களைப் புகுத்தி, பண்பாட்டுப் படையெடுப்பு செய்ததன் மூலம் அதற்கு எதிரான நம் அறவழிப் போர், அறிவுப் போருக்கு வித்திடுகிறார்!
விடுவார்களா குறளிய பகுத்தறிவாளர்கள்! தோழர் மஞ்சை வசந்தன் நாடறிந்த சிந்தனையாளர்! போதிய தரவுகளுடன் அறிவு வாதங்களால் ஆரிய பொய்மைத் திரையைக் கிழித்தெறிகிறார்! இதற்கு மறுப்பு எழுதட்டுமே! வரவேற்போம்!
எனவே, இந்நூல் காலத்தாற் சிறந்த கட்டத்தின் தேவையை நிறைவு செய்கிறது! பல புலவர் பெருமக்கள் செய்யத் தவறிய மாபெரும் பணியை, ஓர் எளிய பெரியார் தொண்டர் ஆணித்தரமான வாதங்களை எழுப்பி பொய்மை யினைத் தோலுரிக்கிறார். அவரது ஆய்வறிவு மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகும்.


Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

610