• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

திராவிடத் திங்கள் – பிப்ரவரி 2021

By திராவிடத் திங்கள் ஆசிரியர் குழு

திராவிடத் திங்கள் – பிப்ரவரி 2021
  • Available in: PDF
  • Published: February 1, 2021
Read PDF

தோழர்களே!

திராவிட இயக்கப் பரிணாம வளர்ச்சியிலே நம் இயக்கத்தவர் நடத்திய இதழ்களுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு, பெரியார், அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன், பாரதிதாசன் என்று திராவிட இயக்க முன்னோடிகள் நூற்றுக்கணக்கான இதழ்களை நடத்தியிருக்கின்றனர். 100க்கும் மேற்பட்ட இதழ்கள் அக்காலத்திலே திராவிட இயக்கக் கொள்கைகளைச் சுமந்துவந்ததாக ஆய்வாளர் க.திருநாவுக்கரசு குறிப்பிடுகிறார்.

திராவிடத் திங்கள், அதன் நீட்சி என்பதை விடவும் அதன் பிள்ளை என்றே குறிப்பிட வேண்டும். நவீன யுகத்திற்குத் தன்னைப் பரிணமித்துக்கொண்ட சிந்தனை மரபுகளில் திராவிட இயக்கமும் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது. நமக்கு நேரெதிரான ஆர்.எஸ்.எஸ். உம் தகவமைத்துக் கொண்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தேசியவாதம் என்ற போர்வையிலே மதவாதம், சனாதன தர்மம் என்று தனது பிளவுக் கொள்கைகளை, மக்கள் விரோத செயல்திட்டங்களை இணையத்திலே அதிதீவிரமாகப் பரப்பிவருன்றனர். இப்படியான சூழலை எப்படி அமைதியாகக் கடப்பது?

திராவிட நாடு என்ற தனிநாடு கோரிக்கையைக் கைவிடுவதாக பேரறிஞர் அறிவித்தபோது, தனிநாடு என்ற கோரிக்கை கைவிடப்பட்டாலும் அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன என்றார். அக்கூற்றின் விளைவாகத் தான் இந்த இதழும், தமிழர் உரிமைகள் காக்கப்பட வேண்டும்; இழந்த உரிமைகள் மீட்கப்பட வேண்டும்; உரிமைகளுக்குத் தடையற்ற, யாருக்கும் தாழ்வற்ற நிலை எய்த வேண்டும். அதற்கான உரிமை விளக்காக ஒளிர வேண்டும் என்ற நோக்கத்தோடு இப்பயணத்தைத் தொடங்குகிறோம்.

தலைப்புகள்

  1. தலித் விரோத பட்ஜெட் – இந்திரகுமார்
  2. இடவொதுக்கீடு – சில பொய்களும் விளக்கமும் – கா. அகிலன்
  3. நாம் ஏன் திமுகவை ஆதரிக்க வேண்டும்? – ஒரு வரலாற்று மீளாய்வு – இரா. வாஞ்சிநாதன்
  4. தேர்தல் முறையில் தேவை மாற்றம்! – யுவராஜ் லோகநாதன்
  5. மோடியும் அமித்ஷாவும் இளைஞர்களைக் கண்டு அஞ்சுவதன் காரணம் என்ன? – ராமச்சந்திர குஹா

Series: திராவிடத் திங்கள், மாத இதழ்கள்

Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

707