• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

வகுப்புவாரி உரிமை ஏன்? (கம்யூனல் ஜீ.ஓ.)

By தந்தை பெரியார்

வகுப்புவாரி உரிமை ஏன்? (கம்யூனல் ஜீ.ஓ.)
ரூ. 49/-
  • Available in: Kindle
  • ISBN: B08SK79DP8
Buy Now

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்கிற சங்கதியானது இன்று நேற்றிலிருந்து பேசி வருகிற சங்கதியல்ல; 1916, 17லிருந்து பேசப்பட்டு வருவதாகும். அந்தக் காலத்திலேயே நமது தலைவர்களும், அறிஞர்களும் வகுப்புகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு அவர்களுக்குக் கல்வித் துறையிலும் உத்தியோகத் துறையிலும் அவரவர்களின் விகிதாசாரப்படி இடம் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டார்கள். அந்தப்படி கேட்டவர்கள் எல்லோரும் 1916, 17 வரையில், அதாவது இந்தக் கோரிக்கையை எழுப்புவதற்கு முன்வரையில் (அவர்கள்) காங்கிரசில்தான் இருந்து வந்தார்கள். வகுப்புவாரி உரிமைக்குக் காங்கிரசில் இடமில்லை என்று கண்ட பிறகு, ஒரு கூட்டத்தாரின் உயர்வுக்கும், நலத்துக்கும் ஆகவே காங்கிரஸ் வேலை செய்துவருகிறது. சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்றென்றும் முன்னேற முடியாத தன்மையில் காங்கிரஸ் காரியம் செய்து வருகிறது என்பதை அறிந்தபிறகு, அவர்கள் காங்கிரசைவிட்டு வெளியேறி சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டவர்களாய், முன் னேறுவதற்கு வழி வகையற்றவர்களாய் இருந்துவரும் மக்களின் முன்னேற்றத் திற்கு ஆக என்று வகுப்புவாரி உரிமை வேண்டும் என்று கேட்டார்கள்.


Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

596