• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

மாயப் பெருநிலம்

By Sen Balan

மாயப் பெருநிலம்
Bestseller
ரூ. 99/-
  • Available in: Kindle
  • ISBN: B07ZMZ4XWG
Amazon.in

துப்பறிவாளன் கார்த்திக் ஆல்டோ தொடரின் மூன்றாவது புத்தகமாக “மாயப் பெருநிலம்” வெளிவந்துள்ளது.

வி.ஐ.பி ஒருவருக்கு ஏற்பட்ட கார் விபத்தை விசாரிக்கச் செல்கிறான் கார்த்திக் ஆல்டோ. அந்த விபத்தின் தொடர்ச்சியாக நேரிடும் நிகழ்வுகளை, புத்தகத்தைக் கீழே வைக்க முடியாத அளவு சுவாரசித்துடன் சொல்கிறது இக்கதை. தடயமே இல்லாமல் குற்றம் செய்வதில் வல்லவர்களான குற்றவாளிகள், அவர்களைப் பிடிக்க முனையும் திறமையான காவல்துறை அதிகாரி என பரபரப்பிற்குப் பஞ்சமில்லாத கதைக்களம்.

இக்கதையில் வரும் பேராசிரியர் ஜெயச்சந்திரனைப் பார்க்கும் வரையில், கார்த்திக் ஆல்டோ தொடர்களில் ஆல்டோவை விட மனதில் நிற்கும் மற்றொரு நபர் இருப்பார் என்பதை நம்பமாட்டீர்கள். பேராசிரியரின் திறமையும், ஆழ்ந்த அறிவும் வியப்பில் ஆழ்த்தும். மொத்தத்தில் ஒரு சாகசப் பயணம் சென்று வந்த மனநிறைவை அளிக்கும் இந்த “மாயப் பெருநிலம்”.

நூலாசிரியர் பற்றி:
சென் பாலன், அடிப்டையில் மருத்துவரான இவர் த்ரில்லர், துப்பறியும் வகை நாவல் எழுதுவதில் வல்லவர். இவரது இரண்டாவது நாவலான “பரங்கிமலை இரயில் நிலையம்” KDP pen to publish 2018 போட்டியில் முதல் பரிசை வென்றது. இந்த நாவல் கிண்டிலில் அதிக எண்ணிக்கையில் படிக்கப்பட்ட தமிழ் நாவல்களில் ஒன்றாக உள்ளது.


Series: புதினம் Tagged with: Amazon Finalist, Bestseller, துப்பறிதல்

Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

14