• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

திராவிட வாசிப்பு – ஏப்ரல் 2021 (நான் விரும்பும் அரசியல் மாற்றம்)

By திராவிட வாசிப்பு மின்னிதழ் குழு

திராவிட வாசிப்பு – ஏப்ரல் 2021 (நான் விரும்பும் அரசியல் மாற்றம்)
ரூ. 49/-
  • Available in: Magzter, Kindle, PDF
  • ISBN: B096Q95YTQ
  • Published: April 1, 2021
Read on MagzterBuy NowRead PDF

வணக்கம்.

2021 தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி, திராவிட வாசிப்பு மின்னிதழை, சிறப்பிதழ்களாக கொண்டுவருகிறோம். கடந்த டிசம்பர் 2020 இதழ், பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தை முன்வைத்து “”சி.என்.அண்ணாதுரை எனும் நான்”” என்கிற தலைப்பில் வெளியானது. ஜனவரி 2021 இதழ், கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தை முன்வைத்து “”மு. கருணாநிதி எனும் நான்”” என்கிற தலைப்பில், பல்வேறு கட்டுரைகளை கொண்டு வெளியானது. பிப்ரவரி 2021 இதழ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பிதழாக வெளியானது. மார்ச் 2021 இதழ் தேர்தலுக்கு முன்னர், “”ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி”” எனும் தலைப்பில் வெளியானது. இதனை தொடர்ந்து ஏப்ரல் 2021 இதழ் “நான் விரும்பும் அரசியல் மாற்றம்” என்கிற தலைப்பில் வெளியாகிறது. 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஓரிரு நாட்களே இருக்கும் நிலையில், புதிதாக அமையவிருக்கும் அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள சவால்கள், அரசாங்கத்திடம் மக்களின் எதிர்பார்ப்பு, நடந்து முடிந்த தேர்தலின் அனுபவங்கள், படிப்பினைகள் என பல விசயங்களை இந்த இதழ் பேசுகிறது.

ஒரு புதிய மாற்றத்தையும், நம்பிக்கையையும், விடியலையும் எதிர்நோக்கி தமிழகம் காத்திருக்கிறது. விடியட்டும்!

இந்த இதழுக்காக பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதித்தந்த உடன்பிறப்புகளுக்கு எங்களது வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


Series: திராவிட வாசிப்பு, மாத இதழ்கள்

Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

658