• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

திராவிடத் திங்கள்-மார்ச் 2021

By திராவிடத் திங்கள் ஆசிரியர் குழு

திராவிடத் திங்கள்-மார்ச் 2021
  • Available in: PDF
  • Published: March 1, 2021
Read PDF

பீ டீம்கள் ஆதிக்கம் உச்சத்தில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் நாம் மிகவும் விழிப்போடு இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பொய்ப் பிரச்சாரம், அதன் தேவைகளை மறக்கடிக்கச் செய்கின்ற போக்கு மிகவும் அபாயகரமானது. இதனைத் தூண்டுவோர் பார்ப்பனர் என்றாலுமே கூட வம் பிள்ளைகள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது.

ஊழல் ஒழிப்பு எங்கின்ற போர்வையிலே நுழைந்துகொண்டு மாற்றம் என்னும் பொய்ப்பசப்பினைப் பூசிக்கொண்டு பார்ப்பன நச்சுகள் ஆடுகின்ற ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. ஊழலின் ஊற்றுக் கண்களைக் கேள்வி எழுப்பாமல் உங்களையும் என்னையும் நோக்கிச் சுட்டுவிரல் நீட்டுவோரிடம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இதனை எதிர்த்து தீர்க்கமாக திராவிடத்தையும் சமூக நீதியையும் பரப்ப வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. சில காலத்திற்கு முன்பு னாம் பெரியாரியவாதிகள் வியந்து பார்த்த சிலரது முகமூடிகள் கிழிந்து அவர்கள் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இனி வரும் காலங்களிலாவது யார் நட்பு சக்தி? யார் நட்பு முரணுள்ளோர்? யார் நம் விரலாலேயே நமது கண்ணைக்குத்தக் காத்துள்ளனர்? என்பதனைக் கூர்நோக்கிச் செயல்பட வேண்டும்.

திராவிடம் என்பது நிலமா? மொழியா? இனமா? என்பதையெல்லாம் தாண்டி திராவிடம் என்பது உணர்வு. திராவிடம் என்பது ஒரு எதிர்க்குரல். திராவிடம் என்பது சுயமரியாதை முழக்கம். எங்கெல்லாம் ஏகாதிபத்தியம் தலைவிரிக்கின்றதோ அங்கெல்லாம் திராவிடத்தின் தேவை இருக்கின்றது. இந்தக் காலகட்டத்தினை நாம் திராவிட மறுமலர்ச்சிக் காலகட்டமாக பரிணமிக்கச் செய்ய வேண்டும்.

திராவிடத் திங்கள் இந்தக் காலகட்டத்து திராவிட ஓட்டத்தின் ஒரு வெளிப்பாடு. பெரியார் வகுத்த திராவிடக் கோட்பாட்டினை எல்லாக் காலத்துக்குமானது. அவ்வகையில் இக்காலத்தினைப் பதிவு செய்யும் பெரியாரின் பேனா தான் திராவிடத் திங்க்கள். எல்லோரும் பெரியாரை அண்ணாவை கலைஞரை பேராசிரியரை பாரதிதாசனை திராவிட இயக்கப் போராளிகளின் வாழ்வையும் வரிகளையும் வாசியுங்கள். எழுதுங்கள். பேசுங்கள். வரையுங்கள். பாடுங்கள். பரப்புங்கள். இந்தத் திராவிட நதி வற்றாது என்று பார்ப்பன நச்சுகளுக்கு உணர்த்துங்கள்.

தலைப்புகள்

  1. தலையங்கம்
  2. ஈழமும் கலைஞரும் – வாஞ்சிநாதன் சித்ரா
  3. அரசியல் அரைவேக்காடுகள் – இந்திர குமார் தேரடி
  4. குழந்தைங்ககிட்ட பேசுங்க – ஆசிரியர் மகாலட்சுமி
  5. பெத்தவங்ககிட்ட பேசுங்க – முரசொலி
  6. கண்ணீர் அறுவடை – கவிஞர் ஆரூர் தமிழ்நாடன்
  7. திராவிட இயக்கக் கலைப்புரட்சியும் படைப்பாளர்களும் – கனிமொழி ம.வீ
  8. தடி – அடி

Series: திராவிடத் திங்கள், மாத இதழ்கள்

Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

713