• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

ஒரு பிள்ளை அம்மாவின் கதை

By Sharmila Rajasekar

ஒரு பிள்ளை அம்மாவின் கதை
சிறுகதை
ரூ. 49/-
  • Available in: Kindle
  • ISBN: B07ZP96L86
Buy Now

மனிதரின் வாழ்க்கையில் ஒவ்வொரு கால கட்டமும் பலவிதமான உறவுகள் கடந்து சென்று கொண்டே தான் இருக்கும். ஒவ்வொன்றும் அன்பு, பாசம், நேசம், துன்பம், களிப்பு என்று மனதில் தோன்றும் மொத்த உணர்வுகளையும் உள்ளடக்கியதாய் இருக்கும். எத்தனை உறவுகள் இருந்தாலும் அம்மாவுக்கும் பிள்ளைக்குமான உறவுக்கிடையேயான பந்தம், மற்ற எல்லாவற்றையும் விட மேலானது… வாழ்வின் பாதையில் ஆயிரம் பேர் வந்தாலும் இவர்கள் இருவருக்குமிடையேயான மனது மட்டும் அருகருகே அமர்ந்து மற்றவர்களை வேடிக்கை பார்க்கும்.. அவ்வளவு எளிதில் இந்த உறவுக்கயிற்றை வெட்டிவிட முடியாது.

இன்றைய காலத்தில் ஆணோ பெண்ணோ, எந்த வித்தியாசமும் இன்றி அவர்களின் படிப்பிற்காக, வளர்ச்சிக்காக, வருங்காலத்திற்காக அழைத்துக்கொண்டே திரியும் பெற்றோர் நிறைந்தது நம் தமிழ் நாடு.

இதில் வரும் ஒவ்வொரு நிகழ்வும் நீங்களும் கடந்த வாழ்க்கையாக ஒரு எண்ணம் தோற்றுவித்தால் அதுவே இந்த கதையின் வெற்றி..!!

மகனின் குழந்தை பருவத்தில் கூடவே பிரயாணம் செய்யும் ஒரு “பிள்ளை அம்மா”வின் கதை இது..!!

கதையின் முக்கியத்துவம் அம்மாவிற்கும் தன் பிள்ளைக்குமானதாக மட்டுமே பள்ளி முதல் கல்லூரிப்பருவம் வரையிலான கதையாக உருவாக்கப்பட்டது..!!


Series: சிறுகதை Tagged with: சமூகம், சிறுகதை

Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

109